Friday, March 13, 2009
நல்லவேளை தப்பித்தேன்: சேவாக் பற்றி அக்ரம்
சேவாக்கின் அதிரடி ஆட்டத்தை வெகுவாகப் புகழ்ந்துள்ள பாகிஸ்தான் அணியின் முன்னாள் கேப்டனும் வேகப்பந்து வீச்சாளருமான வாசிம் அக்ரம், ஓய்வு பெற்றதால் நான் தப்பித்தேன் என்று கூறியுள்ளார்.இது தொடர்பாக அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: சேவாக்கின் அதிரடி ஆட்டத்தை எவ்வளவு நேரமும் ரசித்து பார்க்கலாம். அவரது ஒவ்வொரு ஷாட்டும் பிரமிப்பை ஏற்படுத்துகிறது. சேவாக்கிற்கு பந்து வீசுவது என்பது எந்தவொரு பந்து வீச்சாளருக்கும் சவாலானது. நல்ல வேளையாக நான் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்று விட்டேன். அவருக்கு பந்து வீசவேண்டிய நிலை ஏற்படவில்லை. இல்லையெனில் அவர் எனது பந்து வீச்சை எப்படி எல்லாம் புரட்டி எடுத்து இருப்பாரோ? என்று தெரியாது.பேட்ஸ்மேன்கள் அடித்து ஆடுவது தான் உண்மையான கிரிக்கெட் ஆட்டம். சேவாக் மாதிரி வீரர்களுக்கு ஒரு நாள் போட்டியில் அதுவும் `பவர்-பிளே'யில் பந்து வீசுவது என்பது இயலாத காரியம்.இவ்வாறு அக்ரம் கூறினார்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment