Friday, March 13, 2009

நானோவுக்கு சவால்!


சமீபத்தில் டாடா நிறுவனம் ஐரோப்பாவில் நானோ வகை காரான டாடா ஐரோப்பாவை அறிமுகம் செய்யப் போவதாக அறிவித்தது. சில கார்களையும் அறிமுகப்படுத்தியது.இதையடுத்து அந்நிறுவனம் கடுமையான விமர்சனங்களை சந்தித்து வருகிறது. டாடா நானோ கார்களை விமர்சிப்பவர்கள் வரிசையில் கடைசியாக சேர்ந்துள்ளது ஜெர்மனி கார் தயாரிப்பு நிறுவனமான 'ஆடி'. இந்த நிறுவனம் டாடா நானோ கார் அமெரிக்க மற்றும் ஐரோப்பிய தரத்தில் இருக்குமா என சந்தேகத்தை கிளப்பியுள்ளது.ஐரோப்பிய சந்தையில் குறிப்பாக இங்கிலாந்து மற்றும் ஜெர்மனியில் டாடாவின் கார் நன்றாக விற்பனையாவது கடினமே என 'ஆடி' நிறுவனம் தற்போது வெளிப்படையாகவே கூறி வருகிறது.இதற்கு அந்நிறுவனம் டாடாவினால் நிச்சயம் ஐரோப்பியாவில் இருக்கும் உயர்ந்த தரத்தில் பாதுகாப்பு அம்சங்கள், சிறந்த புகை மற்றும் மாசு கட்டுப்பாடு, அதிக எரிபொருள் பயன்பாடு கொண்ட கார்களை குறைந்த விலைக்கு கொடுக்க முடியாது என கூறியுள்ளது.இந்தியாவில் டாடா நானோ வரும் 23ம் தேதி வரவிருக்கிறது. அதே சமயத்தில் 2011ல் இக்காரை ஐரோப்பாவின் 5 தரச் சான்றிதழுடன் தயாரிக்கக் கூடுதல் அம்சங்களை சேர்க்க இருக்கிறது.

No comments:

Post a Comment